செய்திகள்
மழை (கோப்புப்படம்)

கேரளாவில் இன்றும் மழை நீடிப்பு- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2019-10-05 05:14 GMT   |   Update On 2019-10-05 05:14 GMT
வானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து கேரளாவில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதியுடன் முடிவுக்கு வந்தது.

தென்மேற்கு பருவமழை முடிவடைந்ததும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

இந்த ஆண்டு கேரளாவில் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. ஆனால் அங்கு முன்கூட்டியே பருவமழை தொடங்கி விட்டது.

இது தொடர்பாக கேரள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. மலையோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பை தொடர்ந்து கேரளாவில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, வயநாடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடவும், பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News