செய்திகள்
சிறப்பு சட்டசபை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத்

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள்- உ.பி.யில் 36 மணி நேரம் நடந்த சிறப்பு சட்டசபை கூட்டம்

Published On 2019-10-04 03:47 GMT   |   Update On 2019-10-04 03:47 GMT
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி உத்தர பிரதேசத்தில் 36 மணி நேரம் சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது.
லக்னோ:

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, சட்டசபையில் 36 மணி நேர சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. சட்டசபை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரண்டு அவைகளிலும் நேற்று நள்ளிரவையும் தாண்டி கூட்டம் நடந்தது. பின்னர் சபை வளாகத்திலேயே எம்எல்ஏக்கள் தூங்கினர்.

மறுநாள் காலை எழுந்ததும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியில் ஈடுபட்டு, பின்னர் சட்டசபைக் கூட்டத்திற்கு வந்தனர்.  இவ்வாறு தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதையொட்டி சட்டசபையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்தக் கூட்டத்தை, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இருப்பினும், ரேபரேலி தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வான அதிதி சிங் கூட்டத்தில் பங்கேற்றார்.

தேசத் தந்தையின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும், ஐக்கிய நாடுகள் சபையால் நிர்ணயிக்கப்பட்ட, நிலையான வளர்ச்சிக்கான இலக்கை அடைய மாநில அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இரண்டு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News