செய்திகள்
தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம்

கொல்கத்தா : வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து

Published On 2019-10-03 11:56 GMT   |   Update On 2019-10-03 11:57 GMT
கொல்கத்தாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் தீயை அணைக்க மீட்பு படையினர் விரைந்தனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் சால்ட் லேக் பகுதியில் பைசக்தி என்ற வணிக வளாகம் உள்ளது. இந்நிலையில் அந்த வணிக வளாகத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து பற்றி எரியும் தீயை அணைத்து வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் வணிக வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாக கட்டிடத்திற்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணிகள் தூரிதமாக நடைபெற்றுவருகிறது.
Tags:    

Similar News