செய்திகள்
ராம்நாத் கோவிந்த் மற்றும் மம்தா பானர்ஜி சந்திப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்- மம்தா பானர்ஜி சந்திப்பு

Published On 2019-09-30 16:58 GMT   |   Update On 2019-09-30 16:58 GMT
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கொல்கத்தா:

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி பல்கலைகழக்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜார்க்கண்ட் பயணத்தை முடித்துக்கொண்ட குடியரசு தலைவர் அங்கிருந்து மேற்கு வங்காள மாநிலம் சென்றார்.

மேற்கு வங்காளம் சென்ற குடியரசு தலைவர் கொல்கத்தாவில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மம்தா பானர்ஜியுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். 



வடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி போன்ற விவகாரங்களில் மத்திய அரசுடன் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மோதல் போக்கை கடைபிடித்துவரும் நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடனான இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News