செய்திகள்
தசீன் பாத்திமா

உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக அசம் கான் மனைவி தசீன் பாத்திமா போட்டி

Published On 2019-09-29 15:16 GMT   |   Update On 2019-09-29 15:16 GMT
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அம்மாநில முன்னாள் மந்திரி அசம் கானின் மனைவி ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னர் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடைபெற்றபோது மந்திரியாக பதவி வகித்தவர், அசம் கான்.

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு மற்றும் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான உ.பி.அரசு ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார்.




மாட்டிறைச்சி தொடர்பான கொலைகள் போன்றவற்றையும் மிக வெளிப்படையாக கண்டித்து வரும் இவர் சில வேளைகளில் தனது கருத்துகளால் சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அசம் கான் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட சமாஜ்வாதி கட்சி தீர்மானித்தது.

9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ராம்பூர் சட்டசபை தொகுதியில் அசம் கானின் மனைவி தசீன் பாத்திமா போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி இன்று அறிவித்துள்ளது.

இதே ராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக அசம் கான் 9 முறை பதவி வகித்தவர் என்பதும் தசீன் பாத்திமா தற்போது பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News