செய்திகள்
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் - உத்தவ் தாக்கரே

Published On 2019-09-28 13:02 GMT   |   Update On 2019-09-28 13:02 GMT
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக சிவசேனா கட்சி அறிவித்தது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

மேலும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற சிவசேனா நிர்வாகிகள் கூட்டத்தில் 288 தொகுதிகளிலும் பணியாற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது உத்தவ் தாக்கரே பேசுகையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவுடன் பேசி விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். தவறை நேரடியாக சுட்டிக்காட்டுவது தான் எங்கள் பழக்கம். எங்கள் கூட்டணியில் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News