செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

மோட்டார்சைக்கிள் சீட்டில் துப்பாக்கி - வைரல் வீடியோவின் பகீர் பின்னணி

Published On 2019-09-27 06:40 GMT   |   Update On 2019-09-27 06:40 GMT
மோட்டார்சைக்கிள் சீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்கப்படும் வைரல் வீடியோவின் பகீர் பின்னணியை பார்ப்போம்.



பாகிஸ்தான் நாட்டு போலீஸ் அதிகாரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவில் இந்த சம்பவம் காஷ்மீரில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நான்கு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவில், போலீஸ் அதிகாரி ஒரு மோட்டார்சைக்கிள் சீட்டை கிழித்து அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கிகளை எடுத்த பகீர் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பரிவு 379 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதில் இருந்து காஷ்மீர் பற்றிய பல்வேறு போலி தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. அந்த வகையில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்படும் வீடியோ வைரல் பட்டியலில் இணைந்து இருக்கிறது.



வைரல் வீடியோவில் உள்ள அதிகாரிகள் பாகிஸ்தான் நாட்டு காவல் துறை உடை அணிந்திருக்கின்றனர். இதுவே இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை உறுதி செய்திருக்கிறது. பின் வீடியோ ஸ்கிரீன்ஷாட்களை இணையத்தில் தேடியதில் இதே வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இம்மாத துவக்கத்தில் நடைபெற்றிருக்கிறது. இது கோஹாத் பகுதியில் நடைபெற்றிருக்கிறது. இதே விவரத்தை கோஹாத் மாவட்ட காவல் துறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மோட்டார்சைக்கிளில் கடத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் வைரல் வீடியோ காஷ்மீரில் எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகியுள்ளது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News