செய்திகள்
கணித ஆசிரியர் இல்லாத ஜம்முவில் உள்ள பள்ளி

2 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியர் இல்லை - ஜம்மு காஷ்மீர் ஆளுநர் உதவ மாணவர்கள் கோரிக்கை

Published On 2019-09-26 14:54 GMT   |   Update On 2019-09-26 14:54 GMT
இரண்டு ஆண்டுகளாக கணித ஆசிரியர் இல்லாததால் எங்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே புதிய ஆசிரியர் நியமணம் செய்ய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் உதவி செய்ய வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்னர் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. ஒரு சில பகுதிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு நகரின் உதாம்பூர் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளக 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு கணித பாடம் பயிற்றுவிக்க ஆசிரியர் இல்லை.



 கணித ஆசிரியர் இல்லாத காரணத்தால் எங்கள் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது என அந்த பள்ளியில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், எங்கள் பள்ளிக்கு கணித ஆசிரியரை நியமிக்க அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உதவ வேண்டும் என மாணவ, மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News