செய்திகள்
யோகேஷ்வர் தத்

மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், ஹாக்கி முன்னாள் வீரர் சந்தீப் சிங் பாஜகவில் இணைந்தனர்

Published On 2019-09-26 12:49 GMT   |   Update On 2019-09-26 12:49 GMT
ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மற்றும் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோர் பா.ஜ.க.வில் இன்று இணைந்தனர்.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பா.ஜ.க.  ஆட்சியை தக்க வைக்கவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன.



இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மற்றும் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் ஆகியோர் பா.ஜ.க.வில் இன்று இணைந்தனர்.

அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் சுபாஷ் பராலாவை நேரில் சந்தித்த யோகேஷ்வர் தத், கட்சியில் தன்னை  இணைத்துக் கொண்டார். இதேபோல், முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங்கும்  பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.
Tags:    

Similar News