செய்திகள்
முதலமைச்சர்கள் பழனிசாமி, பினராயி விஜயன்

இரு மாநில நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு - பினராயி விஜயன்

Published On 2019-09-25 12:34 GMT   |   Update On 2019-09-25 12:34 GMT
இரு மாநில நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது என கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் பழனிசாமி இன்ரு கேரளாவுக்கு சென்றார். முதலமைச்சர் தலைமையிலான தமிழக குழுவினர் கேரளா முதல் மந்திரியை இன்று மதியம் திருவனந்தபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர், இரு மாநில முதல் மந்திரிகளும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
 
தண்ணீர் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இரு மாநிலத்தவர்களும் வேறுபாடு இல்லாமல் சகோதரர்களாக உள்ளனர்,

இரு மாநில முதன்மை செயலாளர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பார்கள். முல்லை பெரியாறில் இருந்து மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு பிரச்சனைக்கும் இந்த குழு மூலம் தீர்வு காணப்படும். இரு மாநில தலைமை செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும். 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. பம்பா, அச்சன்கோயில் நதிநீர் பகிர்வு குறித்து குழு முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News