செய்திகள்
சித்தரிப்பு படம்

இயற்கை உபாதைக்காக திறந்தவெளியை பயன்படுத்திய தலித் குழந்தைகள் அடித்துக் கொலை

Published On 2019-09-25 09:42 GMT   |   Update On 2019-09-25 09:42 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று இயற்கை உபாதைக்காக திறந்தவெளியை பயன்படுத்திய தலித் குழந்தைகள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூர்:

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நகரங்கள், கிராமங்கள் உள்பட வீடுகள்தோறும் கழிப்பறைகள் கட்டித்தரும் திட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்துக்குட்பட்ட பாவ்கேதி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தின் அருகே உள்ள திறந்தவெளியில் அதே கிராமத்தை சேர்ந்த ரோஷனி(12), அவினாஷ்(10) என்ற இரு தலித் குழந்தைகள் இன்று காலை மலம் கழிப்பதை கண்ட சிலர் அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் மாவட்ட அரசு  மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்களின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சிர்சோட்  காவல் நிலைய போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News