செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா

தனியார் காவலாளிகளுக்கு நல்வாழ்வு திட்டங்கள் - அமித் ‌ஷா யோசனை

Published On 2019-09-24 21:37 GMT   |   Update On 2019-09-24 21:37 GMT
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் இணைய தளத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா நேற்று தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் இணைய தளத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

நாட்டில் போலீஸ், துணை ராணுவப்படையினர் எண்ணிக்கை 24 சதவீதம்தான். ஆனால், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகள் எண்ணிக்கை 76 சதவீதம் ஆகும். எனவே, காவலாளிகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அவர்களது நல்வாழ்வுக்கான திட்டங்களை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

உதாரணமாக, சுகாதார காப்பீட்டு திட்டம், மருத்துவ பரிசோதனை போன்ற வசதிகளை அளிக்க வேண்டும். ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் அவர்களை சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கி, அதன்மூலம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News