செய்திகள்
சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களில் நச்சு பிரச்சாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

Published On 2019-09-24 11:44 GMT   |   Update On 2019-09-24 11:44 GMT
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் நச்சு பிரச்சாரங்களை தடுக்க தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதன் மூலம் பல்வேறு நன்மைகள் இருப்பினும் மக்கள் பல்வேறு இன்னல்களையும் சந்தித்துவருகின்றனர். சமீபகாலமாக அரசியல் கட்சிகள் சார்ந்த கருத்துக்களூம் மதங்கள் இடையே மோதல்களை உருவாக்கும் வகையிலான வதந்தி மற்றும் தகவல்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில்,  சமூக வலைத்தளங்களில் போலி மற்றும் நச்சு பிரச்சாரங்கள் நிறைந்த செய்திகளை அதிக அளவில் பரவுவதால் அதை உண்மையாக வெளியிடுபவர்கள் யார்? என கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இதனால் தொழில்நுட்பம் மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது.



சமூகவலைத்தளங்களில் நச்சு பிரச்சாரங்களை பரப்பி குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை அரசு கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். 

இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க தேவையான தொழில்நுட்பம் அரசிடம் இல்லை என கூறக்கூடாது. ஏனென்றால், நச்சு பிரச்சாரங்களை பரப்புபவர்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மறைந்து கொள்கிறார்கள் என்றால் அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போலி செய்திகளை தடுக்கவும் வழி உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவுவதை தடுக்க தேவையான வழிகாட்டுதல் முறைகளை மத்திய அரசு 3 வாரத்திற்குள் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். 

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News