செய்திகள்
பிரதமர் மோடி - டிரம்ப்

டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

Published On 2019-09-23 09:24 GMT   |   Update On 2019-09-23 09:24 GMT
அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மோடி பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

மோடி நலமா என்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்றார். மோடியின் அழைப்பை ஏற்று அவர் இதில் கலந்து கொண்டார்.

இருவரும் ஒரே மேடையில் தோன்றி பேசினார்கள். இந்த மேடையில் டிரம்பை அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாக்களித்து மீண்டும் அதிபராக்குமாறு இந்தியர்களிடம் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்த தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மோடி ஹூஸ்டன் நிகழ்ச்சியை பிரச்சாரமாக எடுத்துக்கொண்டதாக விமர்சனம் செய்யப்பட்டது.

மோடியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-



பிரதமர் மோடியின் செயல்பாடு டிரம்புக்கு ஆதரவான பிரசார நிலையை காட்டுகிறது. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு எதிரானது. மோடியின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News