செய்திகள்
துளசி ராமாயணம் புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் ஓவியர்

3000 பக்கங்கள்... 150 கிலோ எடை: ஓவியரின் கைவண்ணத்தில் உருவான பிரமாண்ட துளசி ராமாயணம்

Published On 2019-09-23 04:03 GMT   |   Update On 2019-09-23 04:03 GMT
ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓவியர் ஒருவர், 3000 பக்கங்களில் 150 கிலோ எடை கொண்ட மிகப் பிரமாண்டமான துளசி ராமாயணத்தை எழுதி உள்ளார்.
ஜெய்ப்பூர்:

துளசிதாசர் இந்தியில் எழுதிய ‘ஸ்ரீராமசரிதமானஸ்’ நூல், துளசி ராமாயணம் என போற்றப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு, செய்யுள் வடிவில் எழுதப்பட்ட இந்த துளசி ராமாயணத்திற்கு பல்வேறு விளக்க உரைகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், துளசிதாசரின் ஸ்ரீராமசரிதமானஸ் நூலை, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓவியர் சரத் மாத்தூர், தனது கைவண்ணத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி உள்ளார்.



மொத்தம் 3000 பக்கங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் எடை 150 கிலோ ஆகும். ஆயில் பெயிண்டைப் பயன்படுத்தி புத்தகத்தை எழுதி உள்ளார்.

இதுபற்றி ஓவியர் சரத் மாத்தூர் கூறுகையில், “6 ஆண்டுகளுக்கு முன்பு ராமசரிதமானஸ் புத்தகத்தை எழுத தொடங்கினேன். அயோத்தியில் எப்போது ராமர் கோவில் கட்டப்படுகிறதோ, அப்போது அந்த கோவிலுக்கு இந்த புத்தகத்தை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்” என்றார்.
Tags:    

Similar News