செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் மீண்டும் முதல் மந்திரியாக வருவேன் - தேவேந்திர பட்னாவிஸ்

Published On 2019-09-21 11:48 GMT   |   Update On 2019-09-21 11:48 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் முதல் மந்திரியாக வருவேன் என முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

இந்நிலையில், மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.  அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயகத்தில், மக்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்கிறார்கள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர், சிறப்பான வெற்றியைப் பெற்று மீண்டும் 2-வது முறையாக நான் முதல் மந்திரியாக வருவேன். இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். பாஜக - சிவசேனா கூட்டணி இரண்டு நாளில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News