செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்

Published On 2019-09-21 09:32 GMT   |   Update On 2019-09-21 09:32 GMT
நாடு முழுவதிலும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் கர்நாடகாவில் அதிகபட்சமாக 15 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 17 மாநிலங்களில் உள்ள 63 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 64  தொகுதிகளுக்கு அதே தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்ட அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மாநில வாரியாக இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:-

அருணாச்சல பிரதேசம்- 1
அசாம்- 4
பீகார் - 5
சத்தீஸ்கர் - 1
குஜராத் -4
இமாச்சல பிரதேசம் -2
கர்நாடகா - 15
கேரளா - 5
மத்திய பிரதேசம் -1
மேகாலயா - 1
ராஜஸ்தான் - 2
சிக்கிம் - 3
தமிழ்நாடு - 2
தெலுங்கானா -1
உத்தர பிரதேசம் -11
பஞ்சாப் -4
ஒடிசா - 1
புதுச்சேரி- 1.



இதுதவிர பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள சமஸ்திபூர் மக்களவைத் தொகுதிக்கும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

64 சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் (23-ம் தேதி) வெளியிடப்பட உள்ளது. அன்றைய தினமே வேட்பு மனு தாக்கலும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News