செய்திகள்
யமுனை நதிக்கரையில் தூய்மைப்பணி

உலக தூய்மை தினம்- கடற்கரைகள், நதிக்கரைகளை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்

Published On 2019-09-21 04:20 GMT   |   Update On 2019-09-21 06:50 GMT
உலக தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரைகள், நதிக்கரைகள் மற்றும் பொது இடங்களில் தன்னார்வலர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

உலக தூய்மை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடலோர பகுதிகள், நதிக்கரைகள் மற்றும் பொது இடங்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

அவ்வகையில், டெல்லி கலிண்டி கஞ்ச் பகுதியில் உள்ள யமுனை நதிக்கரை ஓரத்தில் இன்று தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் பங்கேற்று, நதிக்கரையோரம் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர்.



ஒடிசாவின் பூரி மாவட்ட கடற்கரை முழுவதையும் சுத்தம் செய்வதற்காக, மிகப்பெரிய தூய்மை இயக்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி இன்று காலை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள், இதில் ஆர்வத்துடன் பங்கேற்று கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News