செய்திகள்
போராட்ட வீடியோ ஸ்கிரீன்ஷாட்

இந்த போராட்டம் இப்போ நடந்ததா? பீதியை கிளப்பும் காஷ்மீர் விவகாரம்

Published On 2019-09-20 08:19 GMT   |   Update On 2019-09-20 08:19 GMT
காஷ்மீரில் புதிய சட்டத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் என்ற தலைப்பு கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



காஷ்மீரில் போராட்டம் நடைபெறும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. 

1.52 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் போராட்டக்காரர்கள் இந்திய பாதுகாப்பு படையினரை கற்களால் தாக்குவதும், பதிலுக்கு பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

வைரல் வீடியோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அதில், “காஷ்மீர் மக்கள் அதிகளவு இந்திய படையினரை வரவேற்கின்றனர் எனும் மோடியின் பொய் தகவலை இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிடுகின்றன. ஆனால் உலகம் காஷ்மீரில் நடக்கும் இந்திய அராஜகத்தை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது” என தலைப்பிடப்பட்டுள்ளது.



வைரல் வீடியோவின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டதில், வீடியோவில் ருப்ட்லி (Ruptly) எனும் ரஷ்ய செய்தி நிறுவனத்தின் வாட்டர்மார்க் இடம்பெற்றிருக்கிறது. அதை கூகுளில் தேடியதில் 2017 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் வீடியோ காணக்கிடைத்தது. 

யூடியூப் வீடியோவிற்கு, இந்தியா: ஸ்ரீநகரில் போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே நடைபெறும் தள்ளுமுள்ளு என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் வீடியோ பற்றிய விளக்க உரையில் ஸ்ரீநகரில் உள்ள கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டக்காரர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் வீடியோ இரண்டு ஆண்டுகள் பழையது என உறுதியாகிவிட்டது. வைரல் வீடியோவிற்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News