செய்திகள்
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

அயோத்தி நிலம் விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி

Published On 2019-09-18 09:10 GMT   |   Update On 2019-09-18 09:10 GMT
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பாக மத்தியஸ்தக் குழுவின் முன்னர் இருதரப்பினரும் மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதியளித்துள்ளது.
புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வுகாண சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த அவகாசத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது.

இவ்வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைவதால் வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 18-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், மீண்டும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்வானி அக்ஹாரா ஆகிய அமைப்புகள் முன்வந்துள்ளதாக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட மத்தியஸ்தர்கள் குழு சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.



இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ‘இவ்வழக்கை தினமும் விசாரித்துவரும் சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், இருதரப்பினரும் விரும்பினால் மற்றொருபுறம்  சமரச பேச்ச்சுவார்த்தையும் நடத்தலாம்.

ஆனால், தற்போது தினந்தோறும் நடைபெறும் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், அந்த பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கூறி அனுமதி அளித்துள்ளார்.
Tags:    

Similar News