செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2019-09-18 03:55 GMT   |   Update On 2019-09-18 03:55 GMT
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



மன்னார் வளைகுடாவில் தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும். வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா மற்றும் அந்தமான் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே, மீனவர்கள் மீன்பிடிக்கசெல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 
Tags:    

Similar News