செய்திகள்
மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன்

மருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் - மத்திய மந்திரி

Published On 2019-09-17 20:38 GMT   |   Update On 2019-09-17 20:38 GMT
மருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,200 ஆஸ்பத்திரிகள் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 338 ஆஸ்பத்திரிகள் மீது இடைநீக்கம், அபராதம் விதிப்பது, பட்டியலில் இருந்து ஆஸ்பத்திரியின் பெயரை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 376 ஆஸ்பத்திரிகள் மீது விசாரணை நடைபெறுகிறது.

மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகள் இந்த திட்டத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது மட்டுமின்றி, இந்த ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் ஆயுஷ்மான் பாரத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும். இதன்மூலம் அந்த ஆஸ்பத்திரிகள் அவமானப்படுத்தப்படும். இதில் ஊழல் நடைபெறுவதை அரசு துளிக்கூட பொறுத்துக்கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News