செய்திகள்
நிதின் கட்காரி

இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்பது தவறு -நிதின் கட்காரி

Published On 2019-09-17 09:36 GMT   |   Update On 2019-09-17 09:36 GMT
ஒரு சமூகம் என்றும் இடஒதுக்கீட்டால் மட்டுமே முன்னேறும் என கருதுவது தவறானது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
நாக்பூர்:

மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலி சமூகத்தினர் தங்களுக்கு சாதி அடிப்படையில் கட்சியில் இடஒதுக்கீடு செய்து தேர்தலில் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தபோது கட்காரி தனது கருத்தை கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி நிதின் கட்கரி கூறுகையில், ‘இடஒதுக்கீடு என்பது தலித்துகளுக்கும் சமூக, பொருளதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

ஜார்ஜ் பெர்ணாண்டஸ் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்? அவர் எந்த சாதியையும் சாராதவர். அவர் ஒரு கிறிஸ்தவர். ஆனால் பெரிய இடத்தை அடையவில்லையா? இந்திரா காந்தி சாதியை வைத்து ஆட்சிக்கு வரவில்லையே. இப்போதுக்கூட ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் எல்லா சாதி மக்களின் ஆதரவோடும்தான் ஆட்சி அமைத்துள்ளார்.



ஒரு காலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முழங்கப்பட்டது. நானும் ஆமாம் என்று கூறி வந்தேன். ஆனால், இந்திரா காந்தி, வசுந்தர ராஜே, சுஷ்மா ஸ்வராஜ் எல்லாம் எப்படி இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறினர்?.

இந்த கேள்வியைக் கேட்காமல் எப்போதும் நான் இருந்ததில்லை. இடஒதுக்கீடு அளிப்பதால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் எனக் கூறுவது தவறான ஒன்றுதான்’ எனக் கூறியுள்ளார்.
Tags:    

Similar News