செய்திகள்
நீதிபதி சந்தானகவுடர்

கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்

Published On 2019-09-17 06:25 GMT   |   Update On 2019-09-17 06:25 GMT
தகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகியதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியின்போது, கொறாடா பிறப்பித்த உத்தரவை மீறியதால், இரு கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி மோகன் சந்தானகவுடர் இன்று திடீரென விலகி உள்ளார். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 23ம் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உத்தரவு ஏதேனும் பிறப்பிக்க வேண்டும் என தகுதிநீக்க எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், மனு மீது நீதிபதிகள் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News