செய்திகள்
தற்கொலை கடிதம்

3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்

Published On 2019-09-17 05:58 GMT   |   Update On 2019-09-17 05:58 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தில் தற்கொலை செய்துக் கொண்ட பள்ளி மாணவி, இறுதியாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம் மெயின்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், விடுதியில் இருந்த கூடத்தில் நேற்று காலை தற்கொலை செய்துக் கொண்டார்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கிடைக்கவே, உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இடத்தில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இதில், ‘அந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளை கடந்து விட்டது. இன்றும் நான் தண்டிக்கப்படுகிறேன். யாரும் என்னை மன்னிக்கவில்லை. தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன். என்னை விரும்பியவர்கள்கூட என்னிடம் இருந்து விலகிவிட்டனர்.



என்னுடன் படிக்கும் வகுப்பு தோழிகளே புறக்கணிக்கும்போது 12ம் வகுப்பு வரை என்னால் எப்படி அவர்களுடன் படிக்க முடியும்? எனவேத்தான், தற்கொலை செய்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அப்பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், ‘3 ஆண்டுகளுக்கு முன்பு அவள், மற்றொரு மாணவியின் உணவை திருடிவிட்டாள். இதற்காக சீனியர்கள் அவளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தனர்.

அதாவது 48 மாணவிகள் அவளை அடித்தனர். இன்றும் யாரும் பேசவில்லை’ என கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News