செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

அயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு சம்மதம்

Published On 2019-09-16 08:56 GMT   |   Update On 2019-09-16 08:56 GMT
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை நேரலை செய்வதற்கு தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தினந்தோறும் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.



அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு தலைமை நீதிபதி அமர்வு சம்மதம் தெரிவித்தது. மேலும் நேரலை செய்வதற்கு எந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை ஆராய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் எதுவும் அண்மையில் நேரலை செய்யப்படாத நிலையில் அயோத்தி வழக்கை நேரலை செய்ய சம்மதம் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News