செய்திகள்
யஷ்வந்த் சின்ஹா

ஓலா, ஊபரால் எப்படி டிரக், இரு சக்கர வாகனங்களின் உற்பத்தி பாதிப்படையும்? -யஷ்வந்த் சின்ஹா

Published On 2019-09-16 04:23 GMT   |   Update On 2019-09-16 06:42 GMT
வாகன உற்பத்தி சரிவுக்கு எந்த வகையில் ஓலா, ஊபர் காரணமாகும் என முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
புது டெல்லி:

சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 10ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், ‘மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக பெரும்பாலான மக்களின் மனப்போக்கு, ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களை வாங்குவதைவிட ஓலா, ஊபர் போன்றவற்றை பயன்படுத்துவதே சிறந்தது என்றாகிவிட்டது’ என கூறியிருந்தார். நிர்மலா சீதாராமனின்  இந்த விளக்கம் குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது:

மந்திரிகள் சிலர் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் இந்த கருத்துக்கள் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிக்குக் கொண்டு செல்லாது.



இந்தியாவில் விவசாயிகள் முன்னேறினால் மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்திய பொருளாதாரம் 8 சதவீதமாக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், முதல் காலாண்டில் 5 சதவீதமாக மட்டுமே உள்ளது.

இதனால் ரூ.6 லட்சம் கோடி அளவிலான தொகையை நாம் இழந்துள்ளோம். வங்கிகளை இணைப்பதால் வாராக்கடன் எண்ணிக்கையும் குறையப்போவதில்லை. ஓலா, ஊபர் போன்றவற்றால் டிரக், இரு சக்க வாகனங்களின் உற்பத்தியில் எப்படி சரிவு ஏற்படும்? எப்படி பாதிப்படையும்?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News