செய்திகள்
சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்

இவை சந்திரயான் 2 அனுப்பிய புகைப்படங்களா?

Published On 2019-09-13 11:04 GMT   |   Update On 2019-09-13 11:04 GMT
பூமியை சந்திரயான் 2 விண்கலம் படம்பிடித்து அனுப்பியதாக குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களின் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விழுந்து கிடப்பதை சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தது. 

இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலம் பூமியை படம் எடுத்து அனுப்பியதாக குறிப்பிடப்பட்டு, சில புகைபடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில் அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. அது அனிமேஷன் புகைப்படங்கள் என்றும் அவை 6 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். 



இதன்மூலம் அது சந்திரயான்-2 விண்கலம் எடுத்த புகைப்படங்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சந்திரயான்-2 அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும். 
Tags:    

Similar News