செய்திகள்
ஊர்மிளா மடோன்கர் - மிலிந்த் தியோரா

ஊர்மிளா விலகல்: மும்பை வடக்கு காங்கிரஸ் தலைவர்கள்தான் பொறுப்பு -தியோரா

Published On 2019-09-11 04:57 GMT   |   Update On 2019-09-11 04:57 GMT
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் விலகியதற்கு மும்பை வடக்கு பகுதி காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டுமென மிலிந்த் தியோரா கூறியுள்ளார்.
மும்பை:

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியை கடந்த மார்ச் 27ம் தேதி சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் காங்கிரஸ் கட்சியில்  நடிகை ஊர்மிளா மடோன்கர் இணைந்தார். அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் ஊர்மிளா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று திடீரென விலகினார்.

இது குறித்து ஊர்மிளா கூறுகையில், ‘மும்பை காங்கிரசில் நிலவும் சிறுபிள்ளைத்தனமான உள்கட்சி அரசியலை எதிர்த்துப் போராட முடியாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என கூறினார்.



இந்நிலையில் மும்பை காங்கிரசின் தலைவர் மிலிந்த் தியோரா இந்த விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மும்பையின் வடக்கு பகுதியில் இருந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஊர்மிளா முடிவெடுத்தபோது, மும்பையின் காங்கிரஸ் தலைவராக எனது முழு ஆதரவையும் அவருக்கு அளித்தேன்.

ஊர்மிளாவை கட்சிக்கு அழைத்து வந்தவர்களே அவரை கீழே தள்ள நினைத்தபோது நான் அவருக்கு ஆதரவாக இருந்தேன். முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஊர்மிளாவின் இந்த முடிவுக்கு மும்பை வடக்கு பகுதி காங்கிரஸ் தலைவர்கள்தான் பொறுப்பு’ என கூறியுள்ளார்.



Tags:    

Similar News