செய்திகள்
மத்திய அரசு

கா‌‌ஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கு 3 நபர் குழு - மத்திய அரசு அமைத்தது

Published On 2019-09-10 22:13 GMT   |   Update On 2019-09-10 22:13 GMT
கா‌‌ஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு கா‌‌ஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்துசெய்ததுடன், அந்த மாநிலத்தை பிரித்து கா‌‌ஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் என அறிவித்தது. மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்காக 3 நபர் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

முன்னாள் ராணுவ செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான அந்த குழுவில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல், ஓய்வுபெற்ற ஐ.சி.ஏ.எஸ். அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த குழு நிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கான எல்லை வரையறை ஆகியவை குறித்து ஆய்வு செய்யும். இந்த குழு உடனடியாக பணிகளை தொடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News