செய்திகள்
பிரதமர் மோடி மாணவருக்கு பதிலளிக்கும் காட்சி

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக டிப்ஸ் கேட்ட மாணவர் -பதிலளித்த பிரதமர் மோடி

Published On 2019-09-07 06:30 GMT   |   Update On 2019-09-07 06:30 GMT
இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த மாணவர் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறி பதிலளித்தார்.
பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்திற்கு பிரதமர் மோடி சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை காணச் சென்றிருந்தார்.

அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அங்கிருந்த மாணவர் ஒருவர், ஜனாதிபதி ஆவதற்கு டிப்ஸ் கொடுங்கள் என மோடியிடம் கேட்டுள்ளார்.



அதற்கு பதிலளித்த மோடி, ஏன் நீங்கள் பிரதமராகக் கூடாது? என கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவர், ‘நான் இந்தியாவின் ஜனாதிபதி ஆவதே எனது இலக்கு. நான் என்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்? கூறுங்கள்’ என கேட்டுள்ளார்.

இதையடுத்து அம்மாணவருக்கு பதிலளித்த மோடி, ‘வாழ்வில் மிகப்பெரிய இலக்கை குறிக்கோளாக கொள்ளுங்கள். அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். சிறிய இலக்குகளை அடைய முனையுங்கள். ஏமாற்றத்தை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். நீங்கள் தவறவிட்டதை மறந்து விடுங்கள்’ என அறிவுரை கூறியுள்ளார்.

Tags:    

Similar News