செய்திகள்
சந்திரயான் 2 மற்றும் பிரதமர் மோடி

சந்திரயானை தனது சாதனையாக்க துடிக்கிறது பாஜக - மம்தா குற்றச்சாட்டு

Published On 2019-09-06 16:51 GMT   |   Update On 2019-09-06 16:51 GMT
இஸ்ரோவின் சந்திரயான் 2 சாதனையை பாஜக தனது சாதனையாக்க துடிப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொல்கத்தா:

சந்திரயான் 2 விண்கலம், நாளை அதிகாலை 1:55 மணி அளவில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இது வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் 2 படைக்கும்.

இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காளத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி மாநில சட்டசபையில் பேசுகையில், சந்திரயான் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை தங்களால்தான் சாத்தியமாகி உள்ளது என  பாரதீய ஜனதா கட்சியினர் கூறுகிறார்கள். 



மேலும், திடீரென பிரதமர் மோடி இஸ்ரோ தலைமையிடத்துக்கு சென்றுள்ளார். சந்திராயன் 2 வெற்றிக்கு பிறகு அடுத்த சில நாட்களுக்கு வேறு எந்த விவாதமும் நடைபெறாது. சந்திரயான் 2 சாதனையை பாஜக தனது சாதனை போலவும், ஏதோ தாங்கள் தான் அறிவியலை கண்டுபிடித்தது போலவும் பேசுகிறார்கள்.

இந்தியாவில் விண்வெளி தொடர்பான ஆய்வுகள் 60 முதல் 70 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆகையால், சந்திரயான் 2-வின் சாதனை முழுவதும் இஸ்ரோவுக்கு உரியது. என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News