செய்திகள்
சித்தராமையா

உதவியாளர் கன்னத்தில் அறைந்த விவகாரம் குறித்து சித்தராமையா விளக்கம்

Published On 2019-09-06 03:56 GMT   |   Update On 2019-09-06 03:56 GMT
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, அவரது உதவியாளரின் கன்னத்தில் அறைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், மாநில முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா கடந்த 4ம் தேதி மைசூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு வெளியே சென்றார்.

அப்போது அவரது உதவியாளர் ஒருவர், செல்போனை சித்தராமையாவின் காதின் அருகே கொண்டு சென்று, ‘ஒரு அதிகாரி இணைப்பில் இருக்கிறார். அவர் உங்களுடன் பேச வேண்டுமாம்’ எனக் கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சித்தராமையா, உதவியாளரின் கன்னத்தில் பளார் என அறை விட்டு, அங்கிருந்து செல்லும்படி விரட்டினார். இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலானது.



இந்த விவகாரம் குறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரவி என் மகனைப் போன்றவர். நீண்ட காலமாக நான் அவருக்கு வழிகாட்டியாக இருக்கிறேன். ரவி மட்டுமின்றி பலருக்கும் நான் வழிகாட்டியாக இருக்கிறேன்.

அக்கறையின் அடிப்படையில் என் பாசத்தையும், அதிருப்தியையும் எப்போதும் வெளிப்படுத்துவேன். அந்த பாசத்தின் வெளிப்பாடுதான் அந்த சம்பவம்’ என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News