செய்திகள்
மும்பையில் கனமழை

மும்பை கனமழையால் விமான சேவை கடும் பாதிப்பு

Published On 2019-09-05 11:53 GMT   |   Update On 2019-09-05 12:57 GMT
மகாராஷ்டிராவின் மும்பையில் கனமழை காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும்  தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மும்பை தண்ணீரில் மிதந்து வருகிறது. 

மும்பை மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள நீர் வடிந்துவிட்டது. ஆனாலும்,  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட்  எச்சரிக்கையை கருத்தில் கொண்டு மும்பையின் குர்லா, பரேல் மற்றும் அந்தேரி உள்பட பல்வேறு பகுதிகளில் தேசிய பேரிடர் நிவாரணப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



கனமழையால் சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 118 விமானங்கள் தாமதமாக சென்றன, மும்பை வரும் 14 விமானங்கள் மற்றும் 16 வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மழை காரணமாக 20 விமானங்கள் வெளியேற்றப்பட்டன, அதே நேரத்தில் 300 விமானங்கள் தாமதமாக வந்தன. மும்பை கனமழையால் ரயில், விமான சேவைகளில் பாதிப்பு  ஏற்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். 
Tags:    

Similar News