செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் 130 கிலோ தங்கம் காணிக்கை உண்டியல் வசூல்

Published On 2019-09-05 10:44 GMT   |   Update On 2019-09-05 10:44 GMT
திருப்பதி கோவில் உண்டியலில் ஜூலை மாதத்தில் மட்டும் 130 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்தக்கூடிய உண்டியல் காணிக்கை நாள்தோறும் சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வருகிறது. கடந்த சில மாதங்களாக உண்டியலில் செலுத்தப்பட்ட தங்க காணிக்கைகள் பணியாளர்கள் தட்டுப்பாட்டால் சுமார் 800 மூட்டைகளில் எண்ணப்படாமல் இருந்துவந்தது.

இந்நிலையில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் உத்தரவின்படி கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மூட்டைகளில் இருந்த தங்கம் எண்ணப்பட்டதோடு அந்தந்த நாட்களுக்கு உண்டான நகைகள் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி ஜூலை மாதம் மட்டும் 130 கிலோ தங்க நகைகளை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையில் 80 முதல் 100 கிலோ தங்கம் காணிக்கையாக கிடைக்கும். 130 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்தியிருப்பது இதுவே முதல் முறை.

மேலும் ஜூலை மாதத்தில் ரூ.106 கோடி உண்டியல் காணிக்கையும் வசூலாகியுள்ளது.
Tags:    

Similar News