செய்திகள்
ரிசர்வ் வங்கி

கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் - அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு

Published On 2019-09-04 23:53 GMT   |   Update On 2019-09-04 23:53 GMT
அனைத்து வங்கிகளும் தற்போது உள்ள வீட்டு கடன், தனிநபர் கடன் மற்றும் சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் பெற்றவர்களுக்கு உடனடியாக வட்டியை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மும்பை:

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி குறைக்கப்பட்ட வட்டி விகிதம் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பல்வேறு காரணங்களால் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைப்பதில் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை.

எனவே வங்கிகள் தற்போது உள்ள வீட்டு கடன், தனிநபர் கடன் மற்றும் சிறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் பெற்றவர்களுக்கு உடனடியாக வட்டியை குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News