செய்திகள்
இரங்கல் கூட்டத்தில் வெங்கையா நாயுடு

அருண் ஜெட்லி இரங்கல் கூட்டம் - துணை ஜனாதிபதி, அமித்ஷா பங்கேற்பு

Published On 2019-09-03 12:21 GMT   |   Update On 2019-09-03 12:21 GMT
டெல்லியில் நடைபெற்ற முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் இரங்கல் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
 
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே, மத்திய முன்னாள் நிதி மந்திரி மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.



இந்நிலையில், மறைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று அருண் ஜெட்லி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News