செய்திகள்
அமித்ஷா

ஜம்மு காஷ்மீரின் கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை

Published On 2019-09-03 11:35 GMT   |   Update On 2019-09-03 11:35 GMT
சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி காஷ்மீர் மாநிலம் இனி லடாக் என்ற ஒரு பகுதியாகவும், ஜம்மு காஷ்மீர் என்ற மற்றொரு பகுதியாகவும் செயல்படும். அந்த 2 பகுதிகளும் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபை இல்லாமல் செயல்படும். அங்கு துணை நிலை கவர்னர் நியமனம் செய்யப்படுவார்.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார்.



ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முன்னர் அளிக்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து பலதரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. அங்கு வாழும் மக்களின் மனநிலை என்ன? என்பதை பொது வாக்கெடுப்பின் மூலம் அறிந்த பின்னர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் பேசப்பட்டது.

இந்த தருணத்தில் காஷ்மீர் மாநில பஞ்சாயத்து தலைவர்களுடன் அமித்ஷா நடத்திய இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Tags:    

Similar News