செய்திகள்
விண்வெளி வீரர் உடையணிந்து பெங்களூரு சாலையில் நடக்கும் நஞ்சுண்டசாமி

பெங்களூருவிலும் ஒரு சந்திரன் - சாலையின் அவலத்தை விளக்கும் வைரல் வீடியோ

Published On 2019-09-03 10:53 GMT   |   Update On 2019-09-03 10:53 GMT
பெங்களூரு நகரின் மோசமான சாலையை சந்திரனின் குண்டும் குழியுமான மேற்பரப்புடன் ஓப்பிட்டு வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பெங்களூர்:

நாட்டில் உள்ள பல்வேறு சாலைகள் தரமாக போடப்படாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும் வாகனங்கள் பயணிக்க தகுதியில்லாத சூழ்நிலையில் உள்ளது. மோசமான சாலைகளால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகிறது. சில நேரங்களில் மோசமான சாலைகளை சீரமைக்கக்கோரி மக்கள் வித்தியாசமான போராட்டங்கள் நடத்தி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். அதே போன்ற சம்பவம் ஒன்று கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.



அம்மாநிலத்தின் பெங்களூரில் விண்வெளி வீரர்கள் அணியும் உடையணிந்த நபர் ஒருவர் நகரின் முக்கிய சாலை ஒன்றில் மிகவும் மெதுவாக நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. சாலை மிகவும் மோசமான நிலையில் பள்ளம், மேடாக இருந்ததால் அந்த நபர் நடக்கும்போது அது கிட்டத்தட்ட சந்திரனின் மேற்பரப்பு போன்ற தோற்றத்தில் உள்ளது. இந்த வீடியோ வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.

பெங்களூரில் மிகவும் மோசமான சாலைகளால் அதிக விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இது போன்றதொரு வித்தியாசமான போராட்டத்தை நடத்தியதாக விண்வெளி வீரர் உடையணிந்து சாலையில் நடந்த ஓவியர் நஞ்சுண்டசாமி  தெரிவித்துள்ளார். 


Tags:    

Similar News