செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவாலை ஆஸ்திரேலியாவின் கான்பெரா முதல் மந்திரி சந்தித்த காட்சி

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆஸ்திரேலியாவின் கான்பெரா முதல் மந்திரி சந்திப்பு

Published On 2019-09-02 11:18 GMT   |   Update On 2019-09-02 12:18 GMT
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெரா பிரேதசத்தின் முதல் மந்திரி பார் ஆண்ட்ரூவ் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளின் தலைநகரங்களுக்கிடையில் சாதகமான ஒத்துழைப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தஆஸ்திரேலியா தலைநகர் கான்பெரா பிரேதசத்தின் முதல் மந்திரி பார் ஆண்ட்ரூவ் தலைமையில் கான்பெரா பல்கலைக்கழகம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்  பிரதிநிதிகள் அடங்கிய குழு இந்தியா வந்தது.

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று இந்த குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளின் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு பற்றி ஆலோசிக்கப்பட்டது. 

இந்த சந்திப்புக்கு பின்னர் கான்பெராவின் முதல்வர் ஆண்ட்ருவ் பார் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லி, கான்பெரா இரண்டுமே மிக முக்கியமான தலைநகரங்கள். இந்தியத் தரங்களின்படி கான்பெரா மிகச் சிறிய நகரமாகும். 

ஆனால், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் தற்போது முன்னேற்றம் கண்டுள்ள கான்பெரா நகரம் ஆஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் சர்வதேச அளவில் முன்னோடியாகவும்  வளர்ந்து வருகிறது.

டெல்லி முதல் மந்திரியுடன் இன்று அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளை  ஊக்குவிக்க சரியான கொள்கைகளைப் பற்றி ஆலோசனை நடத்தினோம். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்த உதவும் முயற்சிகளில் இரு நாட்டு தலைநகரங்களும் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இந்த சந்திப்பு உருவாக்கியுள்ளது. 

மிகமுக்கியமாக கல்வி, சுகாதாரம் , சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சியில் இருநாடுகளும் எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்தவும் இன்றைய சந்திப்பு வழி வகுத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News