செய்திகள்
சுவிஸ் வங்கி கணக்கு

இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இன்று முதல் கிடைக்கும் - மத்திய வரிகள் வாரியம் தகவல்

Published On 2019-08-31 20:30 GMT   |   Update On 2019-08-31 20:30 GMT
இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்கள் இன்று முதல் கிடைக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுவிட்சர்லாந்து பிரதிநிதிகள் மத்திய வருவாய் துறை செயலாளர் ஏ.பி.பாண்டே, நேரடி வரிகள் வாரிய தலைவர் பி.சி. மோடி, உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சில குறிப்பிட்ட வழக்குகளில் கேட்கும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை துரிதமாக செயல்படுத்துவது குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர்.

அதன்படி சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அளிக் கும் திட்டம் இன்று (செப்டம்பர் 1) முதல் தொடங்குகிறது. 2018-ம் ஆண்டில் உள்ள கணக்கு விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும். 2018-ல் வங்கி கணக்கு முடிக்கப்பட்டு இருந்தாலும் அந்த தகவலும் கிடைக் கும். இது கருப்பு பணம் மற்றும் ‘சுவிஸ் வங்கி ரகசியம்’ ஆகியவற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News