செய்திகள்
கோப்பு புகைப்படம்

இந்து கடவுள் ராமர் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டவர் கைது

Published On 2019-08-31 14:08 GMT   |   Update On 2019-08-31 14:08 GMT
இந்து கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்ட நபரை உத்தர பிரதேசம் மாநில போலீசார் இன்று கைது செய்தனர்.
லக்னோ:

இந்தியாவில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் கிடைத்திருந்தாலும் சில நேரங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்குடிய தவறான செயல்களுக்கும் அரங்கேறி வருகிறது. இதுபோன்றதொரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

அம்மாநிலத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள டிக்கா தேவ்ரி கிராமத்தை சேர்ந்த முஹம்மது ஷஹீத் அன்சாரி என்பவர் இந்து மத கடவுளான ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை சமூக வலைதளமான வாட்ஸ் அப் மூலம் சமீபத்தில் பரப்பியுள்ளார்.



அந்த சர்ச்சைக்குரிய செய்தி மற்ற வாட்ஸ் அப் குழுக்களுக்கும் பரவியதால் இது குறித்து சிலர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, முஹம்மது ஷஹீத் அன்சாரியை போலீசார் இன்று கைது செய்தனர்.
Tags:    

Similar News