செய்திகள்
நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைப்பு - நிர்மலா சீதாராமன்

Published On 2019-08-30 11:35 GMT   |   Update On 2019-08-30 11:35 GMT
செலவினங்களை குறைக்கும் வகையில் பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைக்கப்பட்டு உள்ளது என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வங்கிக் கடனை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் கடன் பத்திரங்கள் திருப்பித் தரப்படும். கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள் அறிக்கை தந்துள்ளன.

தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடரும். 8 வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு நிகரான வட்டிச் சலுகைகளை அளித்து வருகின்றன.
வீட்டுக் கடனுக்கு ரூ.3,300 கோடி கடன் உதவி அளிக்கப்படும்.

வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்க செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கடன் மேலாண்மை எளிமைப்படுத்தப்படும்.

வாராக் கடன் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது, ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது.

நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் வசூலில் சாதனை படைத்துள்ளோம்.

1.25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது, 18 பொதுத்துறை வங்கிகளில் 14 லாபத்தில் இயங்குகிறது. சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது 21% அதிகரித்துள்ளது. வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை. ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது.

பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகளை இணைக்கப்படும். ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும். இதெபோல், இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்படும்.

வங்கிகள் இணைக்கப்படுவதால் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். 7 வங்கிகளில் 82% வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
செலவினங்களைக் குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். உலக அளவில் இந்திய வங்கிகள் விரிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News