செய்திகள்
பிரம்மாண்ட விநாயகர் சிலை

ஐதராபாத்தில் உருவாகிறது பிரம்மாண்ட 61 அடி விநாயகர் சிலை... அசத்தும் சொரூபம்..

Published On 2019-08-30 10:08 GMT   |   Update On 2019-08-30 10:31 GMT
அடுத்த மாதம் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஐதராபாத்தில் 61 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை தயாராகி வருகிறது. இந்த சிலையின் சொரூபம்தான் அசத்தலானது.
ஐதராபாத்:

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு அதனை கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மும்பையில் லாக்பாக்சா பகுதியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பிரசித்திப் பெற்றதைப் போலவே ஐதராபாத்தில் உள்ள கைராபாத் விநாயகரும் பிரபலமானவர்.



இங்கு 61 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையின் சொரூபம்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்த வைக்கிறது. விநாயகருக்கு 12 தலைகள், 24 கைகள் மற்றும் 7 குதிரைகளில் வலம் வரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.



இந்த சிலையின் எடை 50 டன் ஆகும். 4 மாதங்களில் 150 பணியாளர்கள் இணைந்து இந்த விநாயகரை உருவாக்கியுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். வரும் செப்டம்பர் 2ம்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, இந்த விநாயகர் சிலை ஆளுநர் நரசிம்மன் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News