செய்திகள்
கோப்புப் படம்

குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பிய 82 பேர் கைது

Published On 2019-08-29 11:56 GMT   |   Update On 2019-08-29 11:56 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பிய 82 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள வீடியோவில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் குழந்தைகள்  கடத்தப்படுவதாக சமூக விரோதிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இது தவறான செயல் ஆகும். சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள். அதுபோன்ற தகவல்கள் கிடைத்தால் உடனே காவல்துறைக்கு தெரிவியுங்கள். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வதந்தி பரப்பிய 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

கடந்த ஞாயிறன்று எடா மாவட்டத்தில் 50 வயதான ஒரு பெண் ஒருவரை குழந்தை கடத்துவபர் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கினர். இந்த விவகாரத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News