செய்திகள்
ஏர் இந்தியா விமானம்

அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை - ஏர் இந்தியா முடிவு

Published On 2019-08-29 10:35 GMT   |   Update On 2019-08-29 10:35 GMT
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி சமீபத்தில் பங்கேற்ற மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 முதல் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் அஷ்வானி கூறுகையில், அக்டோபர் 2 ம் தேதி முதல் விமானங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

விமானங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக இனி பேப்பர் கப்களும், பிளாஸ்டிக் டம்ளர்களுக்கு பதில் பேப்பர் டம்ளர்களும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News