செய்திகள்
உடல் ஸ்கேனர்

இந்திய விமான நிலையங்களில் கட்டாயமாகிறது உடல் ஸ்கேனர்கள் -மத்திய அரசு

Published On 2019-08-29 09:43 GMT   |   Update On 2019-08-29 09:43 GMT
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அடுத்த 2 ஆண்டுகளில் உடல் ஸ்கேனர்கள் கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புது டெல்லி:

விமான நிலையங்களில் ஒவ்வொரு பயணிகளையும் பாதுகாப்பு சோதனை செய்வது வழக்கமான ஒன்றாகும். இந்த சோதனைகள் இந்தியாவில் காவலர்களின் மெட்டல் டிடக்டர்கள் மூலம் நடத்தப்படுகிறது.

இந்த நடைமுறை சோதனைகள் மூலம் கடத்தல் பொருட்கள், வெடிகுண்டு ஆகியவற்றை முழுவதுமாக கண்டறிய முடிவதில்லை. பயணிகளின் லக்கேஜ்கள் முழுவதுமாக ஸ்கேனர் மூலம் செக் செய்யப்படுகின்றன. இதனால் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்படுகின்றன.



ஆனால், உடலில் பொருட்கள் மறைத்து வைத்திருந்தால் துல்லியமாக கண்டறிய முடிவதில்லை. இதனால் உடலை முழுவதுமாக செக் செய்ய உடல் ஸ்கேனர்கள் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த உடல் ஸ்கேனர்கள் கட்டாயமாக அமல்படுத்தப்பட உள்ளன.

இது குறித்து மத்திய சிவில் விமான பாதுகாப்பு பணியகம், ‘ ஒரு வருடத்தில் அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும், 2 ஆண்டுகளில் அனைத்து விமான நிலையங்களிலும் உடல் ஸ்கேனர்கள் கட்டாயமாக்கப்படும்’ என அறிவித்துள்ளது.



Tags:    

Similar News