செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்

காஷ்மீர் மக்கள் ஒருவரையும் இழக்கமாட்டோம்: ஆளுநர் சத்யபால் மாலிக்

Published On 2019-08-28 14:19 GMT   |   Update On 2019-08-28 14:19 GMT
காஷ்மீர் மக்கள் ஒருவரையும் இழக்கமாட்டோம் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவம் குவிக்கப்பட்டு தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, அவர் கூறியதாவது:

காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு முக்கியம். அவர்களில் ஒருவரையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மட்டுமே காயமடைகிறார்கள் மற்றபடி பொதுமக்களில் ஒருவர் கூட காயமடையவில்லை.

அடுத்த இரண்டு முதல் மூன்று மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 50 ஆயிரம் வேலைவாய்ப்பு பணி இடங்களை நிரப்ப உள்ளதால் இங்குள்ள இளைஞர்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.   



காஷ்மீரில் உள்ள குப்வாரா மற்றும் ஹண்ட்வாரா மாவட்டங்களுக்கு தொலைபேசி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது. தொலைபேசி மற்றும் இணைய தள சேவைகளை நாம் பயன்படுத்துவதை காட்டிலும் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் அதிக அளவில் பயன்படுத்தி நமக்கு எதிராக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். 

ஆகையால், நாம் அதை முழுவதும் தடுக்க வேண்டும். காஷ்மீரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் படிப்படியாக நிச்சயம் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News