செய்திகள்
கபினி அணை (மாதிரி படம்)

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 13 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2019-08-28 05:47 GMT   |   Update On 2019-08-28 05:47 GMT
கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து இன்று மொத்தம் 13 ஆயிரத்து 733 கன அடி தண்ணீர் தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர் மட்டம் 124.80 அடி ஆகும். இதில் 124.80 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 840 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 191 கன அடி வீதம் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கபினி அணையின் மொத்த நீர் மட்டம் 84 அடி ஆகும். அணையில் தற்போது 82.92 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 743 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 7 ஆயிரத்து 542 கன அடி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

2 அணைகளில் இருந்தும் இன்று மொத்தம் 13 ஆயிரத்து 733 கன அடி தண்ணீர் தமிழகத்திற்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News