செய்திகள்
அமித்ஷா

3 மாநில சட்டசபை தேர்தல்- அமித்ஷா 30 கூட்டங்களில் பேசுகிறார்

Published On 2019-08-27 10:08 GMT   |   Update On 2019-08-27 10:08 GMT
சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியம், அரியானா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களிலும் அமித்ஷா 30 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

புதுடெல்லி:

மராட்டியம், அரியானா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த 3 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் விரைவில் முடிகிறது. இந்த ஆண்டு இறுதியில் 3 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

மராட்டியம், அரியானா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களிலும் ஆட்சியை தக்க வைத்துக்கொளும் ஆர்வத்தில் பா.ஜனதா மேலிடம் உள்ளது. இங்கு 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று 3 மாநில பா.ஜனதா பொறுப்பாளர்களுக்கு தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

3 மாநிலத்திலும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதை இலக்காக கொள்ளுமாறும், இதற்காக கூடுதல் கவனத்துடன் செயல்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியம், அரியானா, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களிலும் அமித்ஷா 30 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

பா.ஜனதா ஆட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம் ஆகியவைகளை அவர் பிரசாரத்தில் எடுத்துரைப்பார். மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் அவர் பொதுக்கூட்டங்களில் பேசுவார்.

இதேபோல மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் அமித்ஷா பொதுக்கூட்டங்களில் பேச திட்டமிட்டுள்ளார். இந்த மாநிலங்களில் பா.ஜனதாவை மேம்படுத்த அவர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

Tags:    

Similar News